Tuesday, October 28, 2008

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer

image

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image 

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image

4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

image

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். 

image

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!  

42 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நல்ல பதிவு. பல புதியவர்களுக்கு சிபாரி செய்யலாம். நிச்சயம் பயனுள்ள பதிவு தான்.

வாழ்த்துக்கள்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மிக அருமையாக நேர்த்தியாக பதிவிட்டுள்ளீர்கள்.

பயனுள்ள பதிவு.

Faizal said...

பாலபாரதி மற்றும் சுடர்மணி உங்களின் வருகைக்கு நன்றி... உங்களின் ஊக்கம் எனக்கு டானிக் மாதிரி உள்ளது...

HS said...

http://kelvi.net/?p=664

moulefrite said...

நீங்கள் விளையாட்டாக சொன்னது என்னை போன்ற களிமண்டைகளுக்கு உதவும் என்பதை மறந்து விட்டிர்களா?
ஆனால் எனக்கு இன்னும் ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் toggle செய்யும் முறை தெரியவில்லை கொஞ்சம் விளக்கமாக விளக்குவிர்களா? நான் இந்த கருத்தை சொல்ல வேருதலத்திர்க்கு சென்று டைப் செய்து பின் கோப்பி செய்து பின் இங்கு ஒட்டி உள்ளேன்

Faizal said...

உங்கள் கர்ஸரை நீங்கள் தட்டச்சுசெய் நிணைக்கும் இடத்தில் வைத்து Alt+1 Or Alt+2 or Alt+3 or Alt+4 என்ற எதாவது ஒன்றை அழுத்தி தமிழில் தட்டச்சுசெய்யவும் இன்னும் புரியவில்லை என்றால் மீண்டும் எழுதவும் முடிந்தவைரை உதவுகின்றேன்.

தென்றல் said...

வழ்த்துக்கள்.. பைஷல்.. தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். தனக்குத்தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லித்தருவதும் கூட தானம். கல்விதானம்.. இதற்காக பெரும் பொருட்செலவு ஏதும் இல்லைதான் உங்களுக்கு. ஆனால் இதைச் செய்ய யாரும் இல்லை என்பதே உண்மை. யாரும் இல்லையென்பதைவிட இங்கே சிந்திக்கக்கூட நேரம் இல்லையென்பதே நிசம். ஏனெனில் இங்கே தமிழன்மூளை என்றோ மலுங்கிப்பொய் விட்டது. நீங்கள் எங்கோ இருப்பதால் இதைச் செய்கிறீர்கள்.. நான் எங்கிருந்தோ தமிழகம் வந்து அவதியுருவதால் இதைச்சொல்கிறேன். தொடர்ந்து இப்படிப்பட்ட சேவைசார்ந்த பதிவுகளை அரங்கேற்றுங்கள்.வழிகேட்டுத் தவிப்போர் வழிகாட்டி மரம் பார்த்து அவரவர் இடம் போய்ச்சேரட்டும்.. பதிவுகள் தொடரும்...

top10shares said...

அருமையான பதிவு... கலக்கிட்டிங்க....

top10shares said...

அருமையான பதிவு... கலக்கிட்டிங்க....

ramprasad said...

ிரமாதம் FAISAL SIR. நன்றி.

"ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?"

மாதிரி...

வாழ்த்துக்கள்...

Google Transiteration is much better than this NHM for TYPING but it has some technical defect of something in terms of UTF-8, ANSI formats and POSTING on to WEBSITES.

தமிழ்நெஞ்சம் said...

thanks boss

Ram said...

மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு ...

ஷண்முகப்ரியன் said...

Thank you MR.FAIZAL for your demonstrative NHM blog.I downloaded NHM WRITER but still I DONT KNOW HOW TO USE IT.Anyway வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு.

durai said...

அருமையான நல்ல பதிவு என்னை
போன்ற தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரபிசாதம்
புரியதவர்களுக்கும் சுலபமாக புரியும்
பதிவு
வாழ்க அவர்கள் அனைவரும்
வளர்க அவர்கள் சேவை

K.S.Nagarajan said...

அருமையான வழிகாட்டி.
நன்றி.

NHM Writer பக்கத்தில் உங்களின் இந்த பதிவிற்கான தொடுப்பை கொடுத்துள்ளேன். இதை PDF கோப்பாக எங்கள் தளத்தில் பதிவிறக்கிக்கொள்ள அனுமதி வேண்டும்.

K.S.Nagarajan
New Horizon Media.

Faizal said...

வருகைக்கு நன்றி திரு நாகராஜன்... PDF கோப்பாக வைத்து உங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கிக்கொள்ள எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

riz said...

என்னுடைய்ய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியதற்க்கு மிக்க நன்றி.....

தமிழ் ஆர்வமுள்ளவற்களுக்கு இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

வாழ்த்துக்கள்:)

கீத் குமாரசாமி said...

நண்பரே... நானும் NHM பற்றி என் தளத்தில் என் நடையில் ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதற்கு உங்கள் படங்களைப் பயன்படுத்தினேன். உங்கள் தளத்துக்கு இணைப்புக் கொடுத்து நன்றியும் செலுத்தியுள்ளேன். முன் அனுமதி கேளாமல் விட்டதுக்கு மன்னித்து விடுங்கள்

jhon3447 said...

ந‌ன்றி மிகவும் அருமையான பதிவு..

Faizal said...

திரு ரிஷ், ஜான், கீத் குமாரசாமி, வருகைக்கு நன்றி...

கீத் குமாரசாமி பரவாயில்லை மக்களுக்கு பயன்படதானே...

கிருஷ்ணன் said...

மிக்க நன்றி சார்.
ஒரு சின்ன சந்தேகம். on screen keyboard நான் ரைட் கிளிக் செய்தேன் மானிட்டரில் தமிழில் வரவேண்டிய எழுத்துக்களெல்லாம் கட்டம் கட்டமாக வருகிறதே ஏன் கொஞ்சம் உதவ முடியுமா தயவு செய்து...காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு...
p.krishnan
yahoo pkrishnan143@yahoo.co.in
gmail pkrishnan143@gmail.com

BAVA said...

மிக்க நன்றி ...உங்கள் சேவை தொடரட்டும்..

HAQ said...

தமிழை எளிமையாக உள்ளீடு செய்ய உபயோகமான மற்றும் உண்ணதமான பதிவு. நன்றி நன்பர்களே.

சம்மா said...

நல்ல பதிவு.. நிறைய நன்பர்களுக்கு சிபாரிசு செய்தேன்.. ரொம்ப நன்றி..

san79 said...

hello sir,
is it possible to integrate NHM writer with any windows based application

thanks a lot

vsr said...

When I type in word with Tamil Phonetic Unicode keymap I am getting squre boxes

Ravichandran said...

very beautiful work.thank u.

mayilravanan said...

நல்ல பதிவு.சிறப்பாக செய்துள்ளீர்கள்.
நன்றி.

Rafi said...

மிக்க நன்றி ஃபைஜல். மிகவும் உபயோகம இருந்தது.

Faizal said...

SAN79 : NHM Writer எல்லா Windows Application உடன் இணைந்து பயன்படுத்த முடியும்.

VSR : if you are "getting squre boxes" Please enable regional language on your computer.

BALAJI K said...

எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை ! அருமையான மிகவும் உபயோகமான பதிப்பு ! உங்கள் அனுமதியின்றி ஃபேஸ்புக் இல் சேர்த்துள்ளேன் !

S B Ravi said...

மிக அருமையான மென்பொருள்....தமிழ் கணிணி பயணாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்..... மிக்க நன்றி...
இதில் எப்படி ஃபாண்ட் ஸ்டைல் மாற்றுவது?

thamizh elango said...

வணக்கம்!நாமும் தமிழில் எழுதி பார்ப்போம் என்று e-kalappai-யை தரவிறக்கம் செய்து எழுதிப் பார்த்தேன்.என்னவென்று தெரியவில்லை,திடீரென்று ஒரு வாரத்திற்குள்ளாக எனது கணிணியில் அது செயல் இழந்துவிட்டது.கூகிள் மூலம் இந்த கட்டுரையை படித்து NHM Writerஐ தரவிறக்கம் செய்து கொண்டேன்.இப்போது தமிழில் என்னால் தட்டச்சு செய்ய முடிகிறது.தங்களுக்கு மிக்க ந்ன்றி!

மஸ்தூக்கா said...

இவ்வளவு காலமாக எ கலப்பை தான் பயன்படுத்தி வந்தேன். இன்று தங்கள் பதிவு கண்டேன். உடனடியாக மாறிவிட்டேன். படிப்படியாக தாங்கள் விளக்கியுள்ள விதம் மிக அருமை. எமது தமிழ் இணைய நண்பனில் நன்றியுடன் தங்கள் பதிவுக்கு தொடுப்பு கொடுத்துள்ளேன்.
தமிழ் பதிவுலகில் தங்கள் தொண்டு பலருக்கும் பயனாக இருக்கும். பயன் பெற்ற தமிழ் நெஞ்சங்கள் தங்களை வாழ்த்தும். எம்மைப்போல்.

Punithan said...

நான் கடந்த பல மாதங்களாக Alt+4 உபயோகித்துத் பாமினியில் தட்டச்சுத் தமிழில் செய்து வருகிறேன். Office 2007ஐக் கணணியில் சேர்த்தபின் புதிதாக மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி போடும் பொழுது எழுத்துக்கள் சதுரங்களாக மாறுகின்றன. இதை எப்படி நிற்பாட்டுவது?

அல்லது MS Word Template யாரிடமாவது இருந்தால் தயவு செய்து தந்து உதவவும். நன்றி.

mathileo said...

நான் பல காலமாக தமிழைக் கணணியில் எவ்வாறு கையாள்வது என்று சிரமப்பட்டேன்
எனது பிள்ளைகளோ நான் கெஞ்சினாலும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்!

vengada said...

உங்கள் தமிழ்தொண்டிற்க்கு மிக்க நன்றி.கடவுள் என்ரும் உங்களுக்கு துனையிருக்கட்டும்.

jayashree said...

while typing I see ???? symbol instead of letters
, why whats the reason ?

Faizal said...

புள்ளி போடும் பொழுது எழுத்துக்கள் சதுரங்களாக மாறுகின்றன.

if you are "getting squre boxes" Please enable regional language on your computer.

நீங்கள் இவற்றை சரி செய்ய லாங்வேச் பாரில் தமிழ் என்று உள்ளதா என்று பார்க்கவும். இல்லை என்றால் லாங்வேச் பாரில் தமிழை தேர்வு செய்யவும். அப்படி உங்கள் கணினியில் லாங்வேச் பாரில் இல்லை என்றால் கீழ் தரப்பட்டுள்ள முறையில் சரி செய்து கொள்ளவும்.


Method 1:
Right click on the Taskbar and go to toolbars. If Language Bar option is there check it by clicking it. and you will get Language Toolbar.

Method 2:
Go to Start menu > Control Panel > Regional and Language Options > Languages Tab > Text Services and Input Languages Box> Details… > Settings Tab > Preferences Box > Language Bar…
Now tick the option “Show Language bar on desktop” and you will get Language bar on your task bar.

http://blog.vishalon.net/index.php/how-to-enable-windows-xp-language-toolbar/

hussain said...

உங்களின் முயற்சியைப் பாராட்டுகிறோம் ஆனால் சில குறைபாடுகள் இருக்கின்றன அவற்றையும் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் அதாவது

பாமினி யில் து, தூ, நு, நூ, இவற்றை டைப்பிங் செய்ய முடியவில்லை இவ்வளவெல்லாம் செய்த உங்களுக்கு ஏன் அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியவி்ல்லை அவற்றையும் நிவர்த்தி செய்தால் நன்றாக இருக்கும்.

Thanga said...

நன்றி, உபயோகமான உதவி.

அன்புடன்
அதிரை தங்க செல்வராஜன்

ravi said...

Thanks. I am still having the problems. I am still getting the square boxes. I could not able to resolve this issue. How to "enable regional language on my computer"

Please explain clearly